தகவல் - ஆசிரியர் முஹம்மட் றிஸ்வான்.
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் விஞ்ஞான சாதனையாளர்கள் விழா கடந்த 27.11.2018 அன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானப்பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் Mrs. M.செல்வராஜா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதில் பிரதம அதிதியாக திட்டமிடல் பிரதிக் கல்விப்பணிப்பாளர் MHM.ஜாபிர் சேர் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக தமிழ் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் U.L.றியால் சேர் அவர்களும்,உடற் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் A.L.நஸீர் சேர் அவர்களும் கலந்து சிறப்பித்து வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் விஞ்ஞானப்பாட ஆசிரிய ஆலோசகர் S.L.அக்பர் சேர்,மற்றும் M.செல்வராஜா சேர்,ACAM.இஸ்மாயில் சேர்,A.L.மஜீட் சேர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதில் வலய மட்டத்தில் ஒலிம்பியாட் போட்டி,விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் ,விஞ்ஞான ஆய்வு கூடப் போட்டியில் வெற்றியீட்டிய ஆய்வு கூட பொறுப்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.