Ads Area

2019-புத்தாண்டை உலகில் முதன்முதலாக கொண்டாடிய நியூசிலாந்து மக்கள்.

வெலிங்டன்:

பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரலேசியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது. 

இந்நிலையில், நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே இரண்டாவதாக புத்தாண்டை கொண்டாடி மகிழ்வார்கள். அதன் பின்னர் சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கவுள்ளது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe