(எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் றம்சின் பக்கீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக இடம்பெற்ற இடமாற்றத்திற்கமைவாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
28 வருடங்கள் பொலிஸ் சேவையில் கடமையாற்றி வரும் இவர் போக்குவரத்து பிரிவு, பெரும் குற்ற தடுப்பு பிரிவு, குற்றப் பிரிவு, விசாரணை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடமையாற்றிய அனுபவத்தை கொண்டவர் என்பதுடன், இறுதியாக பொலிஸ் தலைமையகத்தில் வெளிநாட்டு வேலைவாய்பு பெற்றுச் செல்பவர்களின் நற்சான்றிதழ் பிரிவில் கடமையாற்றியுள்ளார்.
சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஏ.எம்.எம்.நஜீப் ஹட்டன் நோவூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் பெற்று சென்றுள்ளதையடுத்தே புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் றம்சின் பக்கீர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.