விஸ்வாசம் படத்துக்காகவும் , அஜித்துக்காகவும் பாடலாசிரியர் அஸ்மின் பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.
விஸ்வாசம் படத்தின் ஆல்பம் இன்று வெளியாகும் நிலையில் தான் அஜித்துக்கு பாடல் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை கவிஞர் அஸ்மின் பாடல் வரிகளாக கொடுத்துள்ளார். இவர் விஜய் ஆண்டணியின் நான் படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்ல என்ற பாடலை எழுதியிருந்தார்.
மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்த நாளில் 'வானே இடிந்ததம்மா' என்ற பாடலையும் எழுதியிருந்தார். இவர் விஸ்வாசம் படத்தில் பாடல்களை எழுதவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்லவி
தூக்குத்தொற பேரக்கேட்ட
வாயப்பொத்தும் நெருப்பு
தூக்கிவச்சி கொஞ்ச சொல்லும்
எங்க தல சிரிப்பு
வேட்டிகட்டி அவர் நடந்தா
வேட்டிக்கெல்லாம் மதிப்பு – நான்
பாட்டில் வச்சி பாடப்போறன்
பாண்டியரின் சிறப்பு
சரணம் : 1
பட்டாக்கத்தி பளபளக்க
பட்டிதொட்டி பரபரக்க
எட்டுவச்சு வச்சு வர்ரார் பாரு
எதிரி ஆகப்போறான் சுக்கு நூறு.
கெட்டதெல்லாம் கருவறுக்க
தொட்டதெல்லாம் தூள்பறக்க..
முட்டி முட்டி மொளச்சாரு
தல வாழ்ந்து வரும் வரலாறு
சோழமன்னன் வந்து
மதுரயில பொறந்தான்
சோகம் ஓடிருச்சு
எமக்கிவன் வரந்தான்
ஏழமக்களுக்கு
அள்ளி அள்ளி கொடுத்தான்
எம்ஜிஆரு போல
பேரு இவன் எடுப்பான்
தன்னாலே வந்து இவன் தலையெடுத்தான்
ஒரு கண்ணாலே எதிரிகளின்
கத முடிப்பான்-வானம்
அண்ணாந்து பார்க்கும் இவன்
பூ மொகத்த..
பூமி கொண்டாடித்தீர்க்கும்
இவன் தைரியத்த.
பலபேர் இருந்தாலும்
தல கொஞ்சம் வித்தியாசம்
அதனால் எல்லோரும்
இவன் மேலே விஸ்வாசம்
ஒருநாள் தமிழ்நாடு
இவன் பின்னே உருவாகும்
தலயின் பெயர் சொல்லி
வெளிநாடும் கொண்டாடும்.
தலை மகன் பிறந்தான்
தமிழ் வழி நடந்தான்
எங்கள் உயிரிலும் மனதிலும்
அவன் அமர்ந்தான்