தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் சமூக ஊடகம் மற்றும் சட்ட ஒழுங்கு எனும் தலைப்பில் இலவச செயலமர்வு காரைதீவு பிரதேச செயலகத்தின் மூலமாக மாளிகைக்காடு கமு/அல்-ஹூசைன் வித்தியாலய வாசிகைசாலை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 30.12.2018 காரைதீவு பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு தலைவரும் முன்னால் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஸ் றகுமத்துல்லா மற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர் முஹம்மட் றியாத், அதிகாரிகள், இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.