Ads Area

தேசிய மட்டத்தில் 2ம் இடம் பிடித்த சம்மாந்துறை மாணவனின் தன் நம்பிக்கை வார்த்தைகள்.

காரைதீவு - சகா.

விவசாய குடும்பத்தில் பிறந்தாலும் சாதிக்க வேண்டுமென்ற வெறி என்னுள் இருந்தது. அதனால் கடும் ஆசையுடன் படித்தேன். பலத்த எதிர்பார்ப்புமிருந்தது. ஆதலால் இன்றைய தேசியநிலை கிடைத்தது. முதலில் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.

இவ்வாறு நேற்று வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவின்படி அகில இலங்கை ரீதியில் தொழில்நுட்பத்துறையில் தேசிய ரீதியில் 2ஆம் இடத்தைப் பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லூரி மாணவன் மொகைடீன் பாவா றிசா மொகமட் கூறினார்.

பரீட்சை முடிவு வெளியானதும் குறித்த சாதனை மாணவனைச் சந்தித்து வினவியபோது மேற்கண்டவாறு கூறினார்.

றிசா மொகமட் உயிரியில் தொழில்நுட்பத்துறையில் 3ஏ பெற்று 2.91 இசட் புள்ளியைப்பெற்று தேசிய ரீதியில் 2ஆம் இடத்தையும் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,நான் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எனினும் படிப்பிற்கு எந்த தடையும் இருக்கவில்லை. என்போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு நான் ஒரு முன்னுதாரணம். என் போன்று படித்து நீங்களும் தேசிய சாதனை படைக்க வேண்டும்.



நான் ஆரம்பக்கல்வியை சம்மாந்துறை அறபா வித்தியாலயத்திலும் பின்னர் முஸ்லிம் தேசிய கல்லூரியிலும் பயின்றேன். என்னைக் கற்பித்த ஆசிரியர்கள், அதிபர் முத்து இஸ்மாயில், பெற்றோர் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என்றார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe