Ads Area

சம்மாந்துறை கல்லரிச்சல் சிறுவர் பூங்காவின் விளையாட்டு உபகரணம் பொருத்தும் பணி.

சம்மாந்துறை கல்லரிச்சல் பிரதேசத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஓதுக்கீட்டில் புதிதாக அமைக்கபடும் சிறுவர் பூங்காவுக்கான உபகரணங்கள் பொருத்தும் வேலை  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் சிறுவர் பூங்கா பிரதேசத்தில் உயர் மின் அழுத்த மின்கம்பி இருப்பதினால் சிறுவர் பூங்காவின் உபகரணம் பொருத்தும் நடவடிக்கை ஒரு சில மாதங்கலாக தடைப்படு காணப்பட்ட வேலைகளை நிறைவு செய்வதற்காக இலங்கை மின்சார சபைக்கு மின் கம்பிகளை அகற்ற நிதி வழங்கப்பட்டுள்ளதுடன் மின் கம்பிகள் ஒரு சில தினங்களில் அகற்றப்பட்டு சிறுவர்களின் பாவணைக்கு கையளிக்கப்படவுள்ளது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe