5250/= செலுத்தி 250/= குறைந்ததால் கதிரை வழங்க மறுக்கப் பட்ட பிஞ்சு ஏழைப் பிள்ளையின் கதையிது.
சம்மாந்துறைக் கல்விக் கோட்டத்தில் ஒரு நகரத்தை அண்டிய பாடசாலை ஒன்றில் நடை பெற்ற உண்மைக் கொள்ளைச் சம்பவம்.
இதனடிப்படையில் ஒரு கதிரை-மேசை செட்டிற்கான மொத்த செலவு 5500/- இத் தொகையினைச் செலுத்தி உங்கள் பிள்ளைகளுக்கான கதிரைச் செட்டுக்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அதிபர் வேண்டியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கான கதிரை-மேசை செட்டுக்கான பணத்தை செலுத்தியிருந்தனர்.
அதில் ஒரே ஒரு மாணவி மட்டும் கடும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவராகையாலும் அந்த மாணவியின் தாய் இடியாப்பம் சுட்டு விற்றல் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் சிறுக சிறுக சேர்த்து 5250 ரூபாய் மாத்திரம் வழங்கியுள்ளார்.
பாடசாலை அதிபர் கதிரை செட்டுக்காக பெற்றோர்களிடம் தலா 5500/= பணம் பெற்றிருந்தும் 04 மாதங்கள் கடந்தும் தங்களது பிள்ளைக்கு பாடசாலையில் உரிய வசதிகள் கிடைக்கப் பெறாததனை அறிந்த பெற்றோர்ளில் ஒருவர் (எனது நண்பர்) அதிபரை அணுகி கேட்டபோது அதிபர் அது விடையம் எனக்குத் தெரியாது அது சம்பந்தமான குழுவைக் கேட்கவேண்டும் என்று பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறியிருக்கின்றார்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த அந்தப் பெற்றோர் கதிரை செய்யும் இடமானது சம்மாந்துறை விளினையாடி பகுதி என்பதைத் தெரிந்து கொண்டு ஓடாவியாரிடம் விசாரித்த போது 03 மாதங்களுக்கு முதலே நாங்கள் கதிரைகள் செய்து விட்டோம் ஆனால் பாடசாலை நிருவாகம் பணத்தினைத் தயார் செய்யவில்லை என்றும் ஒரு மாணவருக்கான கதிரை-மேசை செட்டின் உண்மையான விலை 4500/= தான் என்றும் அந்த ஓடாவியார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அறிந்த பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்தினரோடு முரண்பட்டதனால் அழுத்தம் காரணமாக ஒரு வழியாக பாடசாலை நிருவாகம் இரவோடு இரவாகக் கதிரைகளை பாடசாலைக்குச் தருவித்துள்ளனர்.
குறித்த இச் சம்பவத்தினை விசாரித்து குறித்த அந்தப் பாடசாலை நிர்வாகம், அதிபர் மீது சட்டநடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...??
தகவல் - முஹமட் முஸ்தபா முஹம்மட் ஹபீப்.