வெளியான க.பொ.த.உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.மேலும் அனைவரினதும் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையவேண்டுமெனப்பிராத்திக்கிறேன்.
இம் முறை சம்மாந்துறையில் 10 பேர் மருத்துவ துறைக்கும், 04 பேர் பொறியியல் துறைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, physical science stream இல் மாவட்ட முதலிடமும், Bio Systems Technology Stream இல் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடமும் ( மாவட்டத்தில் முதலாம் இடம்), Engineering Technology இல் மாவட்டத்தில் முதலாம், இரண்டாம், ஐந்தாம், ஆறாம் இடங்களையும் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
கல்வியில் மேலும் சிறப்படைந்து தன்னை சார்ந்த சமூகத்திற்கு, நாட்டிற்கும் சிறந்தவர்களாக நாம் திகழ வேண்டும் என்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.