(காரைதீவு நிருபர் சகா)
அம்பாறை மாவட்டத்திற்கான ஆளுநர் ரோஹிதபோகல்லாகம வெற்றிக்கிண்ணத்திற்கான கடற்கரை கரப்பந்தாட்டப்போட்டி நேற்று(29) வியாழக்கிழமை ஆரம்பமாகியது.
அட்டாளைச்சேனை கடற்கரையில் ஆரம்பமான இப் போட்டி இன்று(30) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3மணிக்கு பரிசளிப்பு நிகழ்வுடன் நிறைவடையும்.
கிழக்கு மாகாண கல்வி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் முத்துபண்டா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வின் அங்குரார்ப்பண இறுதி வைபவங்களுக்கு பிரதம அதிதியாக முறையே சுகாதார அமைச்சின் செயலாளர் எ.எச்.எம்.அன்சாரும் முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.எ.அசீஸூம் பிரதம அதிதிகளாகக்கலந்து கொள்வார்கள்.
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியை ஏற்பாடு செய்து அழைப்புவிடுத்துள்ளதாக திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார்.
இதற்கு சுற்றுலாத்துறை பேரவை அனுசரணை வழங்குகின்றது.