ஏ.ஜே.எம்.ஹனீபா.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் -எம்.பி அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள்,உறுப்பினர்களுக்கிடையிலான சினேக பூர்வ வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு (29) மாளிகைகாடு பேர்ள்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேசிய ரீதியில் ஊடக விருதுளை பெற்றுக் கொண்ட அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசனம் மீரா எஸ் இஸ்ஸதீன், சிரேஷ்ட ஆலோசகர் கலாபூசனம் ஏ.எல்.எம்.சலீம், பொருலாளர் கலாபூசனம் பீ.எம்.எம்.ஏ.காதர் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கும் அன்பளிப்புக்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.