Ads Area

அல்- அர்சத் ம.வித்தியாலயத்தில் தரம் ஒன்றிற்கு சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு.


சம்மாந்துறை அல் அர்சத் மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் ஒன்றிற்கு சேர்ந்த மாணவர்களை வரவேற்று அவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அல் அர்சத் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் பழைய மாணவ சங்க உப தலைவர் எச்.எம் அக்ரம் தலைமையில் அண்மையில்  நடாத்தப்பட்டது. 

 இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பழைய மாணவரும் ஆசிய அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர் அஸ்மி யாஸீன் அவர்கள் கலந்து கொண்டதுடன் மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற தனது உரையை நிகழ்த்தி இருந்தார்.

அவர் உரையாற்றும் போது 
 நாம் வாழும் சமூகத்தில் சிறந்த மாற்றங்களை பாடசாலை மாணவர்களாலேயே உருவாக்க முடியும், மாணவர்கள் புத்தகக் கல்வியினை பரீட்சையில் சித்தி பெற மாத்திரம் கற்காமல் தான் கற்ற கல்வியினால் சமூகத்தில் நல்ல பல மாற்றங்களையும் உண்டு பண்ண முனைய வேண்டும் என  தெரிவித்தார். 

அதன் பின்னர் பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவரும் பாடசாலையின் அதிபருமாகிய ஏ எல் அப்துல் மஜீத் அவர்கள் உரையாற்றும்போது இந்த பாடசாலையில் கல்வி கற்று உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் இந்த பாடசாலையில் பழைய மாணவர்களாக இருந்து செயற்படுவதை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் இந்த பாடசாலை உடைய வளர்ச்சிக்கு இந்த பழைய மாணவர்கள் ஆற்றி வரும் சேவையை எண்ணி நான் பெருமைப்படுகிறேன் என்றார்.

இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவரும் பாடசாலையின் அதிபருமான திரு ஏ. எல். அப்துல் மஜீத் அவர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் திரு எச்.எம் அக்ரம், பாடசாலையின் உப அதிபர் ரஹீம் அவர்களுடன் பழையமாணவ நிர்வாகிகளும் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக பழைய மாணவரும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தர் அஸ்மி யாஸீன் அவர்களுக்கு பழைய மாணவர் சங்க தலைவரும் பாடசாலையின் அதிபர்மாகிய அப்துல் மஜீத் அவர்களினாலும் பழைய மாணவர் சங்க உபதலைவர் அக்ரம்  அவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது

இதை தொடர்ந்து

பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe