Ads Area

அம்பாறை மாவட்டத்திலுள்ள 10 உள்ளுராட்சி மன்றங்களுக்கு கொம்பெக்டர் இயந்திரம்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 10 உள்ளுராட்சி மன்றங்களுக்கு திண்மக்கழிவகற்றல் சேவைக்கான கொம்பெக்டர் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நாளை மறுதினம் 09ஆம் திகதி சனிக்கிழமை காலி நகரில் இடம்பெறவுள்ளது.

கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகள், பொத்துவில், அட்டாளைச்சேனை, காரைதீவு, சம்மாந்துறை, இறக்காமம், உகன, தெஹியத்த கண்டி மற்றும் தமண பிரதேச சபைகளுக்கே தலா ஒரு கொம்பெக்டர் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.

அடுத்த ஒரு சில வாரங்களில் இரண்டாம் கட்டத்தின்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இவ்வியந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச மக்களின் நலன்னை கவனத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முயற்சியின் பயனாக Compactor இயந்திரத்தினை வழங்க நடவடிக்கை மேற்கொண்ட உள்ளக உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் ஆகியோர்களுக்கு சம்மாந்துறை மக்கள் சார்பாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். எம் மாஹிர் அவர்கள்  நன்றிகள் தெரிவித்துள்ளார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe