ஏ.ஜே.எம்.ஹனீபா.
மனிதநேய நற்பணிப் பேரவை சம்மாந்துறை சிறீலங்கா அமைப்பு 2019 ம் வருடத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கும் திட்டங்கள் தொடர்பான விஷேட உயர் மட்ட கலந்துரையாடல் பேரவையின் தலைவரும் பிரதம நிறைவேற்றுப்பணிப்பாளருமான இர்ஷாத் ஏ காதரின் நெறிப்படுத்தலில் பேரவையின் பிரதம ஆலோசகரும் ஆளுனர் சபை உறுப்பினரும் சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸுறா சபையின் தலைவருமான அஷ் ஷேய்க் எம்.ஐ.எம்.அமீர் அவர்களது தலைமையில் சம்மாந்துறை ஒலிவ் ரெஸ்டுரண்டில் நடைபெற்றது.
பேரவையின் ஆளுனர் சபை ஆலேசனைச் சபை பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.இவ்வருடத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கும் பிரதான செயற்பாடாக கல்வியில் சிறந்த மறுமலர்ச்சியை ஏற்படுத்துமுகமாக செயற்பாட்டை முன்கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு எதிர்வரும் மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு சம்மாந்துறையின் முதன்மைப் பெண்களையும் இலக்கிய ஆளுமைப் பெண்களையும் கௌரவிக்கும் நிகழ்வை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.