சம்மாந்துறை ஆடைத்தொழிற்சாலை மிகவிரைவில் ஆரம்பிக்கப்படுவதனை முன்னிட்டு தையல் தொழிற்பயிற்சிகள் சென்ற வியாழக்கிழமை(21) ஆரம்பிக்கப்பட்டது.
சம்மாந்துறை வங்களாவடியில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால் கிழக்கு மாகாண சபையினால் 08கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலையை ஹமீடியாஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்திடம் அண்மையில் கிழக்கு மாகாண சபையினால் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதால் ஹமீடியாஸ் நிறுவனத்தின் பயிற்சி போதனாசிரியர்களினால் யுவதிகளுக்கு தையல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை ஆரம்பிக்கும் முகமாக மௌலவி எம். மஹ்ருப் அவர்களினால் விசேட துஆப்பிரார்த்தனையும் இடம்பெற்றது. இதில் ஹமீடியாஸ் நிறுவனத்தின் பயிற்சி முகாமையாளர் எம்.எஸ்.எம்.றியாத் , பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், ஹமீடியாஸ் நிறுவனத்தின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த ஆடைத்தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இப்பிரதேசத்திலுள்ள மேலும் பல நூற்றுக்கணக்கானோர் நிரந்தர வாழ்வாதாரத்துக்கான வேலைவாய்ப்பையும் பெறவுள்ளனர்.