தற்போது அம்பாறை மாவட்டத்தில் வேளாமை அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, கூடவே மழையும் ஓய்ந்த பாடில்லாது பெய்து கொண்டிருப்பதால் விவசாயிகள் பெரும் துயரங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். மழையில் நனைந்த நெல் மூட்டைகளை வயலில் இருந்து ஏற்றி வந்து அதனை வீதியோரங்களில் உலர வைத்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் சில திருட்டுக் கும்பல்கள் வீதியோரங்களில் உலர வைப்பதற்காக அடிக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை திருடிச் செல்கின்றார்கள்.
இப்படியான ஒரு திருட்டு சம்பவம் அண்மையில் சம்மாந்துறையில் இடம் பெற்றுள்ளது. 15/02/2019 அன்று அதிகாலை சுமார் 02:00 மணிக்கு 03:00 மணிக்கும் இடையில் ஏழை விவசாயி ஒருவர் அறுவடை செய்து வந்து உலர வைப்பதற்காக அம்பாறை பிரதான பாதை ஓரமாக (ஆண்டிர சந்திக்கு இடையில்) அடுக்கி வைத்துள்ளார் அடிக்கி வைக்கப்பட்டுள்ள அந்த நெல் மூட்டைகளில் சுமார் 26க்கும் மேற்பட்ட நெல் மூடைகளை ஒரு கும்பல் திருடிச் சென்றுள்ளது.
இந்த திருட்டுக் கும்பல்களை பிடிக்க சம்மாந்துறை பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த திருட்டுக் கும்பல்கள் தொடர்பாக யாராகினும் அறிந்திருப்பின் உடனடியாக சம்மாந்துறைப் பொலிசாருக்கு தகவல் கொடுக்கும் படி வேண்டப்படுகின்றீர்கள்.
தகவல் - றிஸ்விகான்.