Ads Area

சம்மாந்துறை வைத்தியசாலை அடிக்கல் நடு நிகழ்வும் பெண்கள் விடுதி திறப்பு நிகழ்வும்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சீன அரசாங்கத்தின் 814 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் 55,450 சதுர அடி அளவிலான மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழாவும், சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மருத்துவ பெண்கள் விடுதியினை திறந்து வைக்கும் நிகழ்வும் நடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூரின் அழைப்பின்பேயரில் சுகாதார போஷணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டிவைத்ததுடன், மற்றும் மருத்துவ பெண்கள் விடுதியினை என்பனவற்றை திறந்து வைத்து வைத்தார்.

நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிடத்தொகுதியில் நவீன வசதிகளைக்கொண்ட நோயாளர் விடுதி, அதிதீவிர சிகிச்கைப் பிரிவு, சிறுவர் சிகிச்சைப் பிரிவு, முதிரா குழந்தைகளுக்கான சிகிச்சைப்பிரிவு, உடற்குழாய் உள்நோக்கல் பிரிவு, மகப்பேற்று விடுதி, இரத்த வங்கி, சத்திர சிகிச்சைக்கூடம், ஆரம்ப சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, பெண் நோயியல் சிகிச்கைப் பிரிவு, ஆய்வுகூடம், உட்பட 14 பிரிவுகளைக் கொண்டு அமையவுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார போஷணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில், சத்துர சேனாரத்ன , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம். அன்சார், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாத், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.முஹம்மட் ஹனீபா, பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதார திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe