ஒரு இளைஞனை சமூகப் பற்றுள்ள சிறந்த மனிதனாக மாற்ற வேண்டும் என்றால் நீ அவனுக்கு முதலில் காட்ட வேண்டியது, நூலகத்திற்கு செல்லும் வழியை - பெர்னாட்ஷா -
உலகத்தில் இரண்டு தலை சிறந்த நூலகங்கள் எரிக்கப்பட்டன. ஒன்று: அரேபியர்களின் அறிவுப் பெட்டகங்களை அழித்து விடுமாறு, ரோமானியப் பேரரசன் கட்டளையிட்டு, 16ம் நூற்றாண்டில் எகிப்திய அலெக்ஸாண்ட்ரியா நூலகம் ரோமானிய வீரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. அன்றுலிருந்தே முஸ்லிம்களின் அறிவியல் ஞானம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது.
எம் மண்ணிலும் , கிடைப்பதற்கரிய பொக்கிஷமாய் புத்தகங்களின் பூவனமாய் திகழ்ந்த கல்முனை பொது நூலகம் யாராலும் தீயிடப்படாமலே தீந்து போய் கிடப்பதன் காரணம் என்ன?
அரசியலின் அறியாமையா அல்லது அறிவுள்ளவர்களின் இயலாமையா? அறிவு பகட்ட வேண்டிய புத்தகங்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு மூலையில் வீசப்பட்டுள்ளது ஏன்? முழு கட்டடத்திலும் இயங்கிய நூலகம் இன்று ஒரு கைதியைப் போல் ஒரு அறைக்குள் முடக்கப்பட்டது எப்படி? தீ கூட ஒர் கனப் பொழுதில் எரித்து விடும். அறியாமைத் தீ எம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று விடும்.
கல்முனை நூலகத்தை மீட்டெடுக்க கவர்னர், கமிஷனர், கல்முனை மேயர், உயர் கல்வி அமைச்சர், பிரதி உள்ளூராட்சி அமைச்சர் என்று அனைவருக்கும் மன்றாடி மனு அனுப்பி உள்ளோம். நல்லதொரு முடிவை எதிர்பார்த்து.
Thanks - Maryam Naleemudeen ( AR. Mansoor Foundation)