மருதமுனை மேட்டுவட்டை 65M வீட்டுத்திட்டத்தில் உள்ள 78 வீடுகளை வழங்க அதி மேதகு கௌரவ ஜனாதிபதி்க்கு
ஜனாதிபதியின்கிராமிய அபிவிருத்திப்பிரதிநிதியும் , ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கல்முனை தொகுதி மத்திய குழுவின் தலைவருமான ப.சர்மில் ஜஹான் வேண்டுகோள்.
கடந்த சுனாமி அனர்தத்தின் பின் அரசினால் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் ஒரு தொகுதிவீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு மீதியாக உள்ள வீடுகளையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் , கௌரவ கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புள்ளா , ஸ்ரீ.சு.கட்சி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறியானி விஜய விக்ரம மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தலைவர் எம் எஸ் சுபைர் BA ஆகியோருக்கும் தனது எழுத்து மூலமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
மேற்படி வீடுகளை வழங்குவதில் மிக நீண்ட காலமாக இழுத்தடிப்புகள் இடம்பெற்றுவருவதாகவும்தெரிவித்தார்
இவ்வாறான நிலையில் இங்குள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் அவ்வப்போது இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டு வாருவதாகவும் சில பொருட்கள் காணாமல் போவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் இன்னும் தாமதமாக்கப்படும் பட்சத்தில் இவ்வீடுகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாகவும் தாமதமின்றி இவ் வீடுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.