Ads Area

முடக்கப்பட்டும்; அபிவிருத்திகளை மலர வைத்த மாஹிர்!

அரசியல் பந்தாட்டங்களும், காய் நகர்த்தகல்களும் சாந்தமாக எறியப்பட்ட இக்கால கட்டத்தில் சாதூரியமாக சாதனைகளை நிகழ்த்துவதில் புதுவித அறிமுகத்தை அரங்கேற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிரின் சேவைகள் மெச்சத்தக்கவை!.

அது எவ்வாறு என்றால் முஸ்லிம் காங்கிரஸில் மாஹிர் உயர்பீடத்தில் ஒருவராக இருந்தாலும் அரசாலும் பதவிகளென்று வரும்போது பல வகையான வெட்டுக்குத்துக்களை கட்சிக்குள்ளேயே கவ்விக்கொண்டு அதன் தொடரில் தனக்கு விழுகின்ற ஒவ்வொரு வெட்டுக்களையும் தன் அபிவிருத்தியின் விதையாக்கி உரம் போட்டவர்தான் இவர்.

ஐ.தே.க.வினால் அரசியலுக்கு அறிமுகம் எடுத்தாலும், தனது அரசியலுக்கு உறுப்பு வழங்கிய மு.கா.வையும், அதன் தற்போதைய தலைமையையும் மறவாது எத்தனையோ உள்ளக விரோதங்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டும், மக்களின் நலனில் அக்கறை கொண்டும் செயற்படும் செயல் வீரர் என்றுதான் சொல்ல முடியும்.

இது விடயத்தை நான் கூறக் காரணம் என்னவென்றால் கடந்த 2018 மார்ச் மாதமளவில் மாஹிர் அவர்களிடம் பத்திரிகை நேர்காணல் ஒன்றுக்காக சென்றிருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் குறித்த நேர்காணலின் பின்னர் சிநேகபூர்வ உரையாடிலில் அவர் கூறிய விடயத்தில் தற்போது மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ள அபிவிருத்திகளின் பிண்ணனிகளை விளக்கினார்.

அந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விடயங்களின் பின்னூட்டத்திலுள்ள அவரின் விடயமுயற்சியையும், குறித்த அபிவிருத்திகளை அவர் கொண்டுவந்த தந்திரோபாயங்களையும் எழுதலாம் என நினைத்தபோதும் அக் காலகட்டம் இது விடயத்தினை எழுதுவதற்கு பொருத்தமற்றதாக இருந்தது.

இருந்தாலும், தற்கால சூழ்நிலையில் இவ் அபிவிருத்திகளை அவரின் தனிப்பட்ட முயற்சியின் பலனாக மக்களிடம் கையளிப்பதையிட்டு சம்மாந்துறை சமூகம் சார்பாக வாழ்த்த வேண்டியதும் எமது கடப்பாடே!

பலராலும், குறித்த கட்சியின் சிலராலும் பல விதங்களிலும் விமர்சிக்கப்பட்ட ஒருவர் இவர். “அதிகாரமிழந்து அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்” என்றும் சில காழ்ப்புணர்ச்சியுடையோர் விமர்சித்திருந்ததை அறிந்தேன். ஆனாலும், அவர் அரசியலில் சளைக்கவில்லை.

சவுதி அரேபிய தூதரகத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக இருந்த காலம் தொட்டு மாகாண சபை சென்று, இன்று பிரதேச சபையில் இருக்கும் வரையிலும் ஏராளம் ஏராளம் சேவைகளை வழங்கிய வண்ணமே இருக்கின்றார்.

அதில் அவரால் கொண்டுவரப்பட்ட சில அபிவிருத்திகள் ஒரு சில அரசியலாளர்களின் ‘ஈகோ’வினால் கூட தடைப்பட்ட வரலாறுகளும் உள்ளன.

இந் நிலையிலேயே நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களான,

* 11 மில்லியன் செலவில் கல்லரிச்சல் சிறுவர் பூங்காவும், இருமருங்கு வீதியும்

* 04 மில்லியன் செலவில் கைகாட்டி சிறுவர் பூங்கா

* 21 மில்லியன் செலவில் அன்வர் இஸ்மாயில் மாவத்தை புனர் நிர்மானம்.

* 10.30 மில்லியன் செலவில் ரான்ஸ்போமர் வீதி கொங்ரீPட்இடல்.

* 06 மில்லியன் செலவில் 40 வீட்டுத் திட்டம் கொங்ரீட் இடல்.

* 06 மில்லியன் செலவில் அம்பாறை – 14ஆம் வீதி கொங்ரீட் இடல்.

* 05 மில்லியன் செலவில் அல் ஹம்றா 20ஆம் வீதி கொங்ரீட் இடல்.

* 10 மில்லியன் செலவில் வைத்தியசாலை 2ஆம் வீதி, மல் 10ஆம், பாசிஆலிம் வீதி, மபாஸா – 2ஆம் வீதி, வெள்ளக் காலியர் வீதி, தாருஸ்ஸலாம் 2ஆம் குறுக்கு வீதி, கல்லரிச்சல் எண்ணைக்காயர் வீதிக்கு வடிகான்.

போன்றன மக்கள் பாவனைக்கு பெப்ரவரி 02 ஆம் திகதி கையளிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அந் நிகழ்வும் ஒரு சில காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இந் நிகழ்வுக்கு மு.கா. தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

எது எப்படியோ அபிவிருத்தியை பரவலாக்கி பல பகுதிகளுக்கும் வீச்சுகின்ற பணியென்பது நிச்சயம் வாழ்த்தப்பட வேண்டியதொன்று!

இது ஒருபுறத்தால் செல்கின்ற இந் நிலையில் இன்னுமொரு விடயமும் இருக்கின்றதே!

அதாவது, ‘நாட்டுக்குள்ள ஒன்று ஊட்டுக்குள்ள இரண்டு ஊருக்குள்ள பத்து’ எனும் கதையைப் போல ஒத்தையா ஒருத்தரை மட்டும் 22 கரட் என நம்பி அரசியல் இருப்பை கொண்டிராது, ‘பிள்ளையையும் தொட்டிலையும் ஆட்டிவிடும்’ அரசியல் சாணக்கியத்தில் மு.கா. தலைவர் வல்லவர்.

அந்த வரிசையிலேதான் சம்மாந்துறையிலும் இரு சிங்கங்களை வேட்டைக்கு விட்டுள்ளது அந்தப் புலி. அது எவ்வகையிலென்றால், அதிகாரத்தை ஒரு சிங்கத்திடமும், அசுற வேகத்தை இன்னொரு சிங்கத்திடமும் கொடுத்து வந்த இரையை கூறுபோட்டு தக்காளி சட்னியாக்கி காட்டில் உலாவ விட்டுள்ளது.

இரையைக் கொரித்த மூசாப்பில் அடங்கிவிடாது இரு சிங்கங்களும் அஜீரணத்துக்காக அலைகின்ற படலமே தற்போது சம்மாந்துறையில் அரங்கேரியுள்ளது. இப் படலத்தில் இராமனா!, இராவனனா!! என்கின்ற ஒரு தோற்றப்பாடு நிச்சயம் சம்மாந்துறையில் தலைவிரிக்கும்.

ஏனென்றால், இரண்டும் ஒரு புலி விட்ட சிங்கங்கள். இரையைக் கூறுபோட்டு புலி பார்க்க சிங்கங்கள் ஆடுகின்றன. இச் சந்தர்ப்பத்தில் அதிகாரத்திலுள்ள சிங்கத்தின் அனுமானத்தை அசுற வேகத்தில் மறு சிங்கம் தட்டிக் கொள்கின்றது.

என்னவோ ஊருக்கு நல்லது நடக்குது வாழ்த்துக்கள்!

அடுத்த தேர்தலுக்கு முட்டிமோத தயாராக்கி இரு சிங்கங்களை தந்திரமாக காய்நகர்த்தும் புலியின் கதை சூப்பர்!.

✍️ கியாஸ் ஏ. புஹாரி
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe