Ads Area

சம்மாந்துறையின் எந்தச் சொத்தையும் இழக்க முடியாது.

சொல்வது சின்ன விஷயம் தான் செய்வது தான் கடினம், மேடையில் ஒரு மைக்தான் உலரும் அது பின்னர் முழு ஆட்களையும் உளற வைக்கும். குறிப்பாக நம் சமூகத்தின் தலைவர்களுக்கு வாக்குறுதிகள் வழங்குவது என்பதும், ஏமாற்று வித்தைகளை கையிலெடுப்பது என்பதும் ‘கை வந்த கலை’.

இக் கலையில் கிழக்கில் விணாக்கியானம் வீற்றிருக்கும் இரு கட்சித் தலைவர்களும் தல, தளபதி போன்ற நடிகர்கள் ஆனால், இதிலெண்ண வேடிக்கையென்றால் அந் நடிகர்களிடம் நமது சில எம்.பி.க்கள் விவேக், வடிவேலு போன்ற கதா பாத்திரங்களைப் பெற்றுள்ளனர். இதிலிலுள்ள கவலை அநியாயமாக மக்களை கோமாளிகளாக்க முனைகின்றனர்.

சம்மாந்துறையில் குறித்த ஒரு கட்சித் தலைவரினால் கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு பின், சில மாதங்களிலிருந்து பாட்டம் பாட்டமாக சொல்லப்பட்டு வந்த வாக்குறுதிச் சேவைகளில் ஒன்றுதான் குறித்த ஒரு முக்கியமான செயற்றிட்டம்.

இத் திட்டத்தின் மூலம் பல்வேறு இளைஞர்கள் தொழில் பெறவுள்ளனர், பல நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளன, பல தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்படவுள்ளன என பற்பல கற்பனை வடிவான கதா பாத்திரங்கள் உலாவியமை நாம் யாவரும் அறிந்த ஒரு விடயம்.

அதன் பின்னர் அப்படி இப்படி என்று நாட்களும் கடந்து சென்று அரசியல் சிறு போகம், பெரும் போகத்தில் எல்லாம் களை நாசினி கதை போல குறித்த அபிவிருத்தியை மன்சூர் எம்.பி. தடுத்ததாக வசை வாம்புகளை ஒவ்வொரு மேடையிலும் சொல்லி வந்தனர். உண்மை இது அல்ல. 

மன்சூர் எம்.பி. குறித்த சேவையை தடுக்கவில்லை. மாறாக குறித்த கட்டிடம் வரவிருந்த காணியிலிருந்து உள்ளக ரீதியிலான பின்விளைவினை யாதார்த்தமாக சிந்தித்துதான் அவர்; அதற்கு சில முட்டுக் கட்டைகளை வழங்கியுள்ளார் என்பதை உணர முடிந்தது.

அதாவது, கடந்த 2018.ஒக்டோபர்.16 ஆம் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிருத்திக் குழுக் (டீ.சி.சி) கூட்டத்தில் எமதூரின் ஒரு பாராளுமன்ற உறுப்பினார் கூறியிருந்தாராம் “குறித்த அபிவிருத்தி தடுக்கப்படுகின்றது. அக் கட்டத்திற்கான காணியை குறித்த அமைச்சின் கீழ் கொண்டுவந்தால் உடனடியாக வேலை ஆரம்பிக்கப்படும்” என்றும், காணியை கொடுத்திடுவோமே என இலகுவாக சொன்னாராம்.

மறுகனம் எமதூரின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருந்தாராம் “சம்மாந்துறையின் எந்த சொத்தையும் இழக்க முடியாது. அவ்வாறு காணியை விட்டுக் கொடுப்பதால் பல பிரச்சினைகள் எதிர்காலத்தில் தோன்றும். ஆகவே, குத்தகை அடிப்படையில் காணியை வழங்கலாம், குறித்த அமைச்சு இன்று முஸ்லிம் ஒருவரிடம் உள்ளது.

இதே அமைச்சு நாளை பெரும்பான்மை சமூகத்தவர் ஒருவரது கையில் செல்லும்போது அச்சமயம் அவரொரு இன ரீதியான வெறுப்புடையவராக இருப்பவராயின் எமதூர் பல பிரதிகூலங்களை சந்திக்க நேரிடும். எனவே, குறித்த காணியை குறித்த அமைச்சுக்கு உரித்து கொடுக்க முடியாது.” என்று வாதிட்டாராம்.

இக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர், ஊர் முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் என பலரும் பங்கேற்றிருந்தiமையும் குறிப்பிடத்தக்கது.
சரி, மேலே என்னால் குறிப்பிடப்பட்ட விடயமானது ஒரு Gossip. (அது ஒரு புறம் இருக்கட்டும், சில சிந்தனைக்காக அதனை வைத்துக் கொள்வோம்.) அதன் பின்னணில் இன்னும் பல சுவாரஸ்யங்கள் உள்ளன.

'பேட்டை'யும் #வந்தாச்சு 
'கைத் தொழில் பேட்டை' #வருமா?
==============================

விடயத்துக்கு வருகின்றேன். அதாவது, இற்றைக்கு 2 வருடங்களுக்கு மேலாக வார்த்தைக்கு வார்த்தை சம்மாந்துறையில் கைத் தொழில்பேட்டை அமைக்கப் போகின்றோம், அதிரடியாக திறக்கப் போகின்றோம், வேலை வாய்ப்புக்களை மேம்படுத்தவுள்ளோம், முதலீடுகளை பெருக்கி சம்மாந்துறை செழிக்கச் செய்யவுள்ளோம் என வீர வசனம் பொழிந்த அ.இ.ம.கா.வின் கைத் தொழில் பேட்டையின் கதை என்ன?

சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் முயற்சி செய்த ‘பேட்டை’ திரைப்படமும் வெளியாகிட்டு 2 வருடங்களுக்கு மேலாகியும் ‘கைத் தொழில் பேட்டை’க்கு அடித்தளம் கூட இல்லையே!

மேடைகளில் வியாக்கியாணம் செய்த அ.இ.ம.கா.வின் தீவிர பேச்சாளர்கள் ‘பாம்’ காணியின் பெறுமதியினை உணராமல் சுட்டுவிரலை நீட்டியுள்ளனர் போலுள்ளது. அக் காணி சம்மாந்துறை மண்ணின் பெறுமதிமிக்க சொத்து என்பதையும், தற்காலத்தில் இடம்பெறுகின்ற சுவீகரிப்பு நிலைப்பாடுகளையும் உணர்ந்து கரிசணையுடன் செயற்படுவதே சிறந்த அரசியல் நகர்வு.

மாறாக ஏட்டிக்குப் போட்டியாக அபிவிருத்தி தருகின்றோம் என்கின்ற பெயரில் சுழலும் மூலதனம் ஒன்றுக்காக நிலையான சொத்தினை தாரை வார்த்துக் கொடுப்பது நியாயமல்ல. “தூர்ந்து போன திறப்புக்கு எண்ணெய் தேய்ப்பது” போல அநியாய விணாக்கியானங்களால் அரசியல் மெழுகு பூச முனைவது பாவமாகிவிடும்.

எது எப்படியோ! தற்போது அ.இ.ம.காவின் பாராளுமன்ற உறுப்பினர்; கூட சம்மாந்துறைக்கு உண்டு. இக் கைத் தொழில் பேட்டை விடயத்தை கரிசனையாக எடுத்து, கடுமையான முயற்சியின் பலனாக அவசரமாக குறித்த சேவையை ஆரம்பிக்க எத்தணிக்க வேண்டும்.

அதைவிடுத்து, “பொறி வலைக்குள் சிக்கிய எலி” போல பிறரை குற்றம் சொல்லி வியாணக்கியானம் சொல்வதில் எந்தப் பயனுமில்லை.

எது எப்படியோ! அ.இ.ம.காவினால் வழங்கப்பட்ட வாக்குறுதி சம்மாந்துறை கைத் தொழில் பேட்டை, இந்த Subject Expiration ஆகுதே! என்று இது விடயம் சம்பந்தமாக ஆராய்ந்த போதுதான் சிக்கியது சில உண்மைகள்.

இதிலிருந்து உணர்ந்து கொண்ட விடயமொன்றுதான் குறித்த அபிவிருத்தியின் தடைக்கும் மன்சூர் எம்.பிக்கும் நெருங்கிய சம்பந்தம் எதுவுமே இல்லை. குறித்த காணி எமதூரை விட்டு இன்னொரு அரச நிறுவனத்தின் பிடியில் பறிபோய்விடக் கூடாது என்பதில்தான் அவர் குறியாக உள்ளார்.

எனவே, யாராக இருந்தாலும் இயாலாத வித்தைக்கு கண்கட்டி மாயை உருவாக்க முனைய வேண்டாம். தனது பொருளிலுள்ள கவனத்தைப் போல் நமது பொருளென்றும் கவனம் கொள்ள வேண்டியவர்களாக சமூகப் பொறுப்பாளர்கள் திகழ வேண்டும். இந் நாட்டில் அவ்வாறான பெறுமதியான காலத்தின் பினைப்பிலுள்ளோம் என்பதை யாவரும் மறவாதீர்!

✍️ கியாஸ் ஏ. புஹாரி
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe