Ads Area

அமைதிக்கான நடவடிக்கையாக இந்திய விமானி நாளை விடுதலை செய்யப்படுவார்.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அபிநந்தனை ஒப்படைக்க வேண்டும் என நேற்று இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் துணை தூதரிடம் வெளியுறவுத்துறை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள விங் கமாண்டர் அபிநந்தன் விரைவில் விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரம் குறித்து ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும்  என  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்  வெளியிட்டு உள்ளது. அபிநந்தன் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளார் எனவும் தகவல் தெரிவித்து உள்ளது.

இது குறித்து  இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முமகது பைசல் கூறும்போது,

பைலட் விஷயத்தை இந்தியா எங்களிடம் கொண்டு வந்து உள்ளது. இரண்டு நாட்களில் நாங்கள் எந்த விதமான நிபந்தனை விதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம் என கூறினார்.

இந்த நிலையில், அபிநந்தன்  நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவித்து உள்ளார். 

அமைதிக்கான நடவடிக்கையாக இந்திய விமானி நாளை விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe