Ads Area

நாளை மறுதினம் (28) சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகலாம்.

நடைபெற்று முடிந்துள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 28ம் திகதி வெளியிடப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது. 

பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் இம்மாத இறுதியில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித முன்னதாக கூறினார். 

கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe