Ads Area

சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற சம்மாந்துறை வலய மட்ட விளையாட்டு விழா.

காரைதீவு சகா.

சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்தில்  சம்மாந்துறை வலய மட்ட விளையாட்டு விழா அண்மையில் சிறப்பாக இடம் பெற்றது இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் உட்பட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

இங்கு உரையாற்றிய சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், 

மாணவர்கள் கல்வி என்றால் அது பல்கலைக்கழகம் புகுவது தான் என்று நினைக்கின்றார்கள். மாறாக சமகாலத்திலே இணைப்பாடவிதான செயற்பாடுகளில் போதுமான அக்கறை செலுத்த தவறி வருகின்றார்கள் எனத் தெரிவித்தார்.

சம்மாந்துறை வலய மட்ட விளையாட்டு விழா அல் அர்சத் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

வரலாற்றில் முதற்தடவையாக சர்வதேச அங்குரார்ப்பண விழா போன்று எமது வலய விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண விழா இடம்பெற்றுள்ளது. பாராட்டுக்குரியது. அதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டுகின்றேன்.

இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான சான்றிதழ்கள் சில நேரம் பல்கலைக்கழகம் புகுவதற்கும் பயன்படுகின்றன என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே மாணவர்கள் கல்வியுடன் இணைப்பாடவிதான செயற்பாடங்களிலும் கூடுதல் அக்கறை காட்டவேண்டும். அப்போது தான் சமநிலை ஆளுமை கட்டியெழுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த விளையாட்டுப் போட்டியில் சம்மாந்துறை நாவிதன்வெளி, இறக்காமம் ஆகிய மூன்று கோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றி இறுதி நாளான இன்று பல பரிசில்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe