Ads Area

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதிக்கான போராட்டம்!.

இன்று (19) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற மாபெரும் நீதிக்கான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பெருந்திரளான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டு நீதிவேண்டி ஜெனீவாவை நோக்கி முளக்கமிட்டுள்ளனர்.

மட்டக்களப்பபு, கல்லடி பாலம் அருகில் இருந்து ஆரம்பமான பேரணி காந்திப்பூங்காவரை சென்றிருந்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்தப்பேரணிக்கு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், பொது மக்களென அனைத்துத் தரப்பினரும் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். வடக்கிலிருந்தும் அதேபோல் அம்பாரை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்தும் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனீவா மனித உரிமைப் பேரவைமூலமே தமக்கான நீதி கிட்டும் என்ற கருத்திலமைந்த வாசகங்களைக்கொண்ட பதாதைகளை ஆர்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வார்ப்பட்டம் காரணமாக கிழக்குமாகாணத்தில் பல பிரதேசங்களில் வழமைநிலை பாதிக்கப்பட்டிருந்ததுடன் வாகனப்போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இதேபோன்றதொரு பேரணி வடக்கிலும் கடந்த 16ம் திகதி நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe