Ads Area

ஏன் முதுமைத் திருமணத்தை சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

பொதுவாக முஸ்லிம் சமூகத்தின் திருமண சட்டங்கள் மாற்று மதத்தவர்களின் திருமண உறவு முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இஸ்லாமிய சட்டவியல் நடைமுறையும் மாற்று சமூகத்தின் மத்தியில் தவறான கண்ணோட்டத்தில் சமூகமயமாக்கப்பட்டதும், இஸ்லாமிய குடும்பவியல் பற்றிய எண்ணக்கரு மக்கள் மன்றம் பரவலாக்கப்படாததும் இஸ்லாம் மீதான துர்கண்ணோடத்தை காட்சிப்படுத்தி மெருகூட்டியது.

பண்டைய நாகரிக வரலாற்றை சற்று நோக்குவோமானால் இஸ்லாமிய திருமண சட்டவியல் வரையறை ஒருமித்த சமாந்தர போக்கை காணமுடியும். ஆண், பெண் உடலியல், உளவியல் தேவையை நன்கு உணர்ந்த இறை சட்டங்களும் சம்ரதாயங்களும் நடைமுறை வாழ்விற்கு வலுவூட்டுவதாகவே அமையவேண்டும்.

சமூக கண்ணோட்டம், தனிநபர் தேவைப்பாடுகளை ஒப்பியல் நோக்கோடு இஸ்லாமிய வரையறைகளை நாங்கள் அளவீடு செய்யமுடியாது. அவ்வகையில் முதுமைத் திருமணம் குறித்தான பிற்போக்கு சிந்தாந்தம் அண்மைய நாகரிக முதிர்ச்சியின் விளைவாக தோற்றம் பெற்ற ஒன்றாகும்.
முதுமைத் திருமணம் குறித்து நாம் சமூக கண்ணோட்டத்தை தனிநபர் உடலியல் உளவியல்சார் தேவைப்பாட்டோடு ஒப்பாய்வு நோக்கில் நோக்குவதே காலத்திற்கு பொருத்தமென நினைக்கின்றேன்.

ஏன் முதுமைத் திருமணம் சமூகம் நிராகரிக்கிறது.?

01. தன்மானப்பிரச்சினை. 
02.கண்ணோட்டத்தில் குறிப்பாக பாலியல் தேவையை மட்டும் கொண்டு நோக்குதல். 
03. சொத்துப்பங்கீடு 
04. இரண்டாவது திருமண மணப்பெண் தேர்வு நடைமுறை சிக்கல்.

ஏன் முதுமைத் திருமணத்தை சமூகம்  அங்கீகரிக்க வேண்டும்? 

01. ஆசா பாசங்களை பகிர்ந்து கொள்ளவும், மனம் விட்டு பேசிக்கொள்ளவும் ஒரு உரிமையுள்ள துணை தேவை. இதனால் தனிமை உணர்வு இல்லாமை, தனிமை யோசனை இல்லாமை போன்றவற்றால் உள ஆரோக்கியம் கிடைப்பதோடு மனவெழுச்சி ஆறுதல் கிடைக்கும்.

02. பாலியல் தேவை மரணிக்கும் வரை தூண்டப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் பெண்களில் குறித்த வயதெல்லை அப்பால் உடலுறவில் நாட்டம் இராது. இதனால் ஆண்களின் உடலியல் தேவை கேள்விக்குறியாகி தவறான நடத்தையின் பால் ஈர்க்கப்பட வாய்ப்புண்டு. இதற்கு அண்மைய சமூகவியல் உதாரனங்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

03. செயலிழப்பு ஒருவேளை ஏற்படுமாயின் அவர்களின் துணை அவர்களை பாதுக்காத்து பராமரிக்கும் பாரிய பணியை மேற்கொள்வார்கள். குழந்தைகளிற்கு பொறுப்பு இருந்தபோதும் அவர்கள் சமகால உலகில் தொடர்ச்சியாக கவனிக்கும் வாய்ப்பு மந்தமாகவே காணப்படும்.

04. உணவு, உடை, உறக்கம் மற்றும் உறவு முறைகள் மீதான தனித்துவ தேவையையும், விருப்பு வெறுப்புகளையும் மற்றவர்களிற்கு இடையூறற்று புரிந்துகொண்ட வாழ்வார்கள்.

05. வாழ்கையில் சுய கெளரவம், தன்னம்பிக்கை, சுய தேவைகளை நிறைவு செய்யும் அங்கீகாரம் மற்றும் கொடுக்கல் வாங்கல் மீதான தன்னிலை அதிகாரம் என்பன கிடைக்கப்பெறும்.

06. வாழ்வை உடைத்து தனக்கென சமூக அந்தஸ்தை பெற்றுக்கொள்வார்கள். இதனூடாக தனது மார்க்க வரையறையில் ஆன்மீக செயற்பாடுகளில் கரைகள் இல்லாமலும், ஓய்வுநிலை கால பயனுள்ள களிப்பு தொடர்ச்சியாக மேற்கொள்ளவும் சாதகமாகும்.

"தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், நீங்கள் திருமணமுடிக்க தகுதியானவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து மஹராக கொடுத்துத் திருமணம் செய்யத் தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது" (அல்-குர்ஆன் 4:24)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe