Ads Area

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டும் இயல்புநிலை திரும்பவில்லை!

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். நேற்று கொழும்பிலும், ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, நேற்று மாலை அமுலுக்கு வந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளதாகவும், ருவன் குணசேகர தெரிவித்தார்.

எனினும், நாடெங்கும் பதற்றமான நிலை காணப்படுகிறது. போக்குவரத்து வழமைக்குத் திரும்பவில்லை. தூர இடங்களிலிருந்து கொழும்பை நோக்கி பயணிக்க வேண்டிய பயணிகள் பஸ்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. குறுகிய தூர பஸ்களில் கடும் சன நெரிசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe