Ads Area

வணக்கஸ்தலங்கள் மீதாக தாக்குதலை கண்டித்து கல்முனை, சாய்ந்தமருது மக்கள் துக்கம் அனுஷ்டிப்பு!

(றியாத் ஏ.மஜீத்)

வணக்கஸ்தலங்கள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலை கண்டித்தும் அதில் பலியானவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்குமுகமாக சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் கடைகள் மூடப்பட்டு, சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் கடைகளிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு தங்களது உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தாக்குதலில் பலியான மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுமாறும் முடியுமான உதவிகளை வழங்குமாறும் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe