- அஹமட் சாஜித் -
அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள் சம்மாந்துறை மண்ணில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பேன் என கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிக்கமைவாக இரண்டு வருடங்களுக்கு முன்பே கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து பணத்தையும் ஒதுக்கினார். ஆனால் இது வரையும் அதற்கான நிலம் காணி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டு ஒதுக்கப்பட்ட பணம் எப்போது திரும்பும் என்ற நிலையில் உள்ளது. இது சம்மந்தமாக சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, மஜ்லிஸ் அஷ்ஷுரா, உலமா சபை போன்றோர்களை அமைச்சர் நேரடியாகவும் சந்தித்து, கடிதங்கள் மூலம் அலுவலக ரீதியாகவும் தொடர்பு கொண்டு காணியை வழங்குங்கள் உடனடியாக கைத்தொழில் பேட்டை வேலைகளை ஆரம்பிப்போம் என பல முறை கேட்டுக் கொண்டார். ஆனால் இதுவரையும் காணி வழங்கப்படவில்லை.
மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் பல முறை வருடக்கணக்காக கைத்தொழில் பேட்டை விடயமாக கலந்துரையாடப்பட்டும் சம்மாந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் இதன் இணைத்தலைவராக இருப்பதனால் அவரின் அரசியலுக்காகவும், அரசியல் இருப்புக்காகவும் கைத்தொழில் பேட்டை அமைக்கும் நடவடிக்கையை குழப்பி காணியை வழங்காமல் தடுக்கும் நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருக்கின்றார். கடந்து மூன்று வருடங்களுக்கு மேலாக இத்திட்டத்திற்கு காணி வழங்காமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுக் கொண்டுவருகின்றது என்பதை அனைவரும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் நாட்டில் குறிப்பிட்ட நான்கு இடங்களுக்கு கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆரம்பப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அத்திட்டத்திற்குள்ளே சம்மாந்துறையும் உள்வாங்கப்பட்டுள்ளமையினால் ஏனைய இடங்களில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டும் சாம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டை வேலைகளை ஆரம்பிப்பதற்கு காணி வழங்கப்படாத பிரச்சினை தடையா உள்ளது. இது கடைசி முயற்சி இந்த நேரத்தில் காணி வழங்கப்படாதவிடத்து ஒதுக்கப்பட்ட பணம் திரும்பும் அல்லது சம்மாந்துறை மண்ணுக்கான கைத்தொழில்பேட்டை கைமாறி வேறு இடங்களுக்கு செல்லும் நிலையும் உள்ளது. இவைகளை உணராமலா இந்த சம்மாந்துறை சமூகம் உள்ளது!!
நேற்று இடம்பெற்ற சம்மாந்துரைப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கைத்தொழில் பேட்டைவிடயமாக கலந்துரையாடப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் " மஜ்லிஸ் அஷ்ஷுரா, உலமா சபை, பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை போன்ற முச்சபைகளும் காணி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இருந்தும் முதலீட்டாளர்கள் யார் என்ற விடயம் அறிந்த பின்னரே காணி வழங்கப்படுமென்று கூறி" இழுத்தடிப்புச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டதுடன் தனது அரசியல் இருப்புக்காக இதனை மறைமுகமாக தடுக்கும் நடவடிக்கைகளையும் செய்கின்றார் என்பதை இலகுவாக விளங்க முடியும். ஏனையவர்கள் அனுமதி கொடுத்தும் தாங்கள் வழங்காமல் மறுப்பதன் நோக்கம்தான் என்ன??
காணி வழங்கப்பட்டு ஆரம்ப வேலைகள் நிறைவடைந்த பின்னரே முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களின் திட்டம், நோக்கம், பட்ஜட் என்பன ஆலோசனை செய்யப்பட்டு முதலீட்டாளர் தீர்மானிக்கப்படுவர். அவ்வாறு உள்ள போது காணி வழங்காமல் முதலீட்டாளரை தீர்மானியுங்கள் என்றால் இதனை என்னெவென்று சொல்வது. இது தடுப்பதற்கான உங்களின் சாட்டுப் போக்கா?

தேர்தல் மேடைகளில் நமது ஊர்ப் பெண்கள் அம்பாறை நகருக்கு தொழில் நிமிர்த்தம் ஆடைத்தொழிற்சாலைக்கு செல்வதைத் தடும்போம் அவர்களுக்கான தொழில்களை ஏற்படுத்திக் கொடுப்போம் என வீரவசனம் பேசும் நீங்கள், சம்மாந்துறையில் கைத்தொழில்ப்பேட்டை அமைந்தால் 2000 பேருக்கு தொழில்வாய்ப்பு கிடைத்து அவர்கள் அம்பாறைக்கும் வேறு இடங்களுக்கும் செல்வதைத் தடுக்கலாம் என்பதை உணரவில்லையா?? அல்லது தனது அரசியல் இருப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்று சம்மாந்துறை மண்ணின் மக்களின் அபிவிருத்தியைக் குழப்புகிறீரா?
சிந்தியுங்கள் மக்களே !!
நீங்கள் சந்தோசமாகவும், ஆடம்பரமாகவும் வாழலாம் அன்றாடம் தமது தேவைகளுக்காக தொழில் நிமிர்த்தம் அம்பாறை, உஹனை போன்ற ஆடைத் தொழிற்சாலைக்கு சென்றுவரும் பெண்கள் படும் கஸ்டங்களையும், துயரங்களையும் உணர்ந்து சிந்தித்து அற்ப அரசியலுக்காகவும், தங்களது அரசியல் இருப்பைப் பாதுகாப்பதற்காகவும் இவ்வாறான திட்டங்களுக்கு தடையாகவிருக்கும் அரசியல்வாதிகளை உணர்ந்து செயற்படுங்கள். இதனை விட்டுவிட்டு சிலர்கள் ஊரின் அபிவிருத்தியை சிந்திக்காமல் தங்களது பக்கட்டை நிறப்புவதற்காக போலியாக எந்த விடயமும் அறியாமல் சமூகவலைத்தளத்தில் அமைச்சர் றிஸாட் சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டை அமைப்பேன் என போலி வாக்குறுதியளித்தார், வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? என கூவாமல் காணி வழங்காமல் ஏன் தடுக்கப்படுகின்றது என்பதை சிந்தியுங்கள்.