Ads Area

பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டிப்பு! - கிண்ணியாவில் அதிர்ச்சி சம்பவம்.

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றில், பிரசவத்தின் போது, குழந்தையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 39 வயதுடைய கர்ப்பிணிப் பெண் கடந்த செவ்வாயன்று, கிண்ணியாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவத்தின் போது குழந்தை தலை வேறாகவும், உடல் வேறாகவும் பிறந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மகப்பேற்று பரிசோதனைக்காக வைத்தியரை சந்தித்தபோது, குழந்தைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என தெரிவித்துள்ளார். பிரசவத்திற்கு 24ஆம் திகதியும் குறித்துக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு, செவ்வாய் கிழமையன்று குழந்தை பிரசவிப்பதற்கான வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்தே வைத்தியசாலையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள், சுகபிரசவத்திற்காக குழந்தையை வெளி நோக்கி இழுத்துள்ளனர். இதன்போது குழந்தையின் உடலில் இருந்து தலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், குழந்தை ஒருவாரத்துக்கு முன்னரே இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஒரு வாரத்துக்கு முன்னர் குழந்தை இறந்திருந்தால் பிரசவ வலி எப்படி வந்திருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிள்ளையின் சடலம் தற்போது பிரதே பரிசோதனைக்காக பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Thanks - Seithy


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe