மொஹமட் றிஸ்விகான்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழுவின் இனைத்தலைவருமான கௌரவ உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் அவர்களின் முயற்சியின் பயனாக வீடு இல்லாமல் வீடு கட்ட வசதியில்லாமல் வாழ்கின்ற குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று 31/05/2019 இடம் பெற்றது.
மலையடிகிராமத்தில் சுமார் 100 வீடுகளும் சென்னல் கிராமம் 1,2 ஆகிய பிரதேசங்களில் சுமார் 100 வீடுகளும் முதல் கட்டமாக அமைக்கப்படவுள்ளது.
இவ் அடிக்கல் நடு நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலக செயலாளர் , உதவி செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் மற்றும் ,பிரதேச சபை உறுப்பினர்கள் வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் ,கிராம உத்தியோகத்தர்கள்,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏராளமான பொதுமக்கள் இன்நிகழ்வில் கலந்து சிறப்பித்த தோடு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம் ஐ எம் மன்சூர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.