அரச அலுலகங்களில் பணிபுரிவோருக்கான சீருடை தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருப அமுலாக்கம் நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவு மூலம் இடை நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த 29/04/2019 மற்றும் 13/05/2019 ல் முறையே வெளியிடப்பட்ட 2121/1 மற்றும் 2123/4 வர்த்தமாணி அறிவித்தல்கள் தொடர்பான விளக்க சுற்றுநிருபம் அமுலாக்கல் அவகாச காலம் குறிக்கப் படாமல் வெளியிடப்பட்டிருக்கின்றமை முஸ்லிம் மாதரை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேற்படி விடயம் குறித்து அரசாங்கத்தில் உள்ள சக அமைச்சர்களை கிஞ்சித்தும் கணக்கில் எடுக்காது அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தனது அமைச்சின் அதிகாரிகளைப் பணித்திருப்பது முஸ்லிம் சமூகத்தினை நோவினை செய்யும் காழ்பணர்வுப் பரப்புரைகளை அரச யந்திரத்தினூடாக மேற்கொள்ள எடுக்கும் மற்றுமொரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
முஸ்லிம் மாதரின் சீருடை விவகாரத்தை முஸ்லிம் சமய கலாச்சார, அமைச்சு முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற ஊறுப்பினர்களை கலந்தாலோசித்து கையாள்வதே முறையான நடவடிக்கையாகும்.
அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ள முஸ்லிம் அமைசாசர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக இது தொடர்பாக மக்களை அறிவுறுத்துவதோடு அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்