சம்மாந்துறை பிரதேச சபையினால் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.ஜெயச்சந்திரன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், பிரதேச சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட திணைக்கள தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசல் தலைவர் மௌலவி அஷ்ஷய்க் ஏ.எல்.எம்.றிப்கான் (நளீமி) விசேட மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினார்.