இலங்கையில் இடம்பெற்ற மோசமாக தாக்குதலையடுத்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடவடிக்கைள் இடம்பெற்று வருகின்றது இதனடிப்படையில் வவுனியா பிரதேசத்தில் இடம் பெற்ற சோதனை நடவடிக்கையில் 85 தோட்டாக்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பிரதேசவாசிகளால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று மாலை இவை கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் அந்தப் பகுதியில் மேலதிக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், எனினும் எவ்வித வெடி பொருட்களும் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.