Ads Area

ஒரு நாயின் தாய்ப் பாசம் கண்டு கலங்கிப் போய் கண்ணீர் சிந்தினேன்.

இன்றைக்கு காலையில கடைத் தெருவிற்கு சென்றேன். அங்கு கடைக்கு எதிரில் ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு நாய் ஒன்று உணவு தேடிகிட்டு இருந்தது. அங்கு பக்கத்தில் விளையாடிகிட்டு இருந்த சிறுவர்கள் அதை பார்த்ததும் கல்லை எடுத்து எறிந்தனர். அந்த கல் அந்த நாயின் காலில் பலமாக அடிபட்டது. காலில் இரத்தம் சொட்ட ஒட முயன்ற அந்த நாய் வலியிலும் குப்பையில் கிடந்த எதோ ஒரு உணவு பொட்டலத்தை வாயில் கவ்விக்கொண்டு நொண்டிக் கொண்டே ஓடியது.

அந்த சிறுவர்களிடம் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் அது பாவம்....என்று கூறிவிட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு எனது வண்டியை எடுத்துக் கொண்டு நாயைத் தொடர்ந்தேன்.

சிறிது தூரம் சென்றதும் அந்த நாய் ஒரு புதரின் அருகில் நிற்பதை பார்த்தேன். அதை பார்த்ததும் என் மனம் கலங்கியது.

அங்கு ஐந்து நாய் குட்டிகள் இருந்தது.அது கவ்விக்கொண்டு வந்த உணவு பொட்டலத்தை 5 குட்டிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

அந்த நாயின் தாய்மை பாசத்தை நினைத்து கண்கள் கலங்கியது. நான் கொண்டுவந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அந்த நாயின் அருகில் சென்றபோது வலியில் எனது கண்களில் இருந்து கண்ணீர் கொப்பளித்தது.

ஏனெனில் நாயின் கண்களிலிருதும்  கண்ணீர் சொட்டியது.

தயவு செய்து பிரயாணிகளிடதில் அன்பாக இருங்கள், அவைகளுக்கும் பிள்ளைகள்-குட்டிகள் இருக்கின்றன ஒரு தாய் நாயை நம்பி அதன் குட்டி நாய்கள் உணவுக்காக காத்துக் கொண்டிருக்கும் அல்லவா.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe