கெகிராவை, மடாடுகம பிரதேசத்தில் தௌஹீத் பள்ளிவாசலை முஸ்லிம் சகோதரர்களே சென்று உடைத்தார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.
முஸ்லிம்களுக்கு மத்தியில் மதரீதியான, கோட்பாடுரீதியான பல்வேறுபட்ட பிரிவுகள் இருக்கலாம் அவைகளை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பள்ளிவாசல்களை உடைப்பது தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்று எங்களுக்குள்ளே மோதிக்கொள்வது மிகமோசமான ஒரு பயங்கரமான செயலாகும்.இவ்வாறான செயல்களினூடாக முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டு தாங்களே அழிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் இன்று இச்சம்பவங்களை ஏற்படுத்தியிருக்கின்ற பயங்கரவாதிகளின் குறிக்கோள்களாகும்.
ஆகவே தயவு செய்து அவ்வாறு தமது இனத்துக்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்துவதற்கு நீங்கள் முன் உதாரணமாக இருந்து விடாமல் உடனடியாக இச்சம்பவத்தினை கண்டிப்பதுடன் இலங்கையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை தடுப்பதோடு தப்லீக், தௌஹீத், சூபிஸம், வஹாபிஸம், ஜமாஅத் இஸ்லாமி என்ற வேறுபாடுகள் வித்தியாசங்களை உருவாக்கிக்கொள்ளாமல் ஒற்றுமையாக மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதுடன் நாம் அனைவரும் முஸ்லிம்கள் "லாயிலாஹ இல்லழ்ழாஹ்" எனும் கலிமாவை சொன்னவர்கள் எங்களுக்குள் பலவேறுபாடுகள் இருக்கலாம்.எனவே இந் சூழ்நிலையில் மிகக்கவனமாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் நடந்துகொள்ளவேண்டும்.
எனவே தயவு செய்து தீவிரவாதிகளுக்கும், பௌத்த தீவிரவாதிகளுக்கும், எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நீங்கள் எவரும் துணைபோய்விடக்கூடாது என மிக அன்புடன் புனித மக்காவில் இருந்து மிக உருக்கமாக இந்த வேண்டுகோளை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விடுப்பதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.