Ads Area

கிளிநொச்சியில் பயங்கர வாள்வெட்டு - பெண்கள் உள்ளிட்ட பலர் படுகாயம்!

கிளிநொச்சி - செல்வாநகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களில், கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 9 பேர் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில், கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் அடங்கியுள்ளனர்.

பட்டா ரக வாகனம் மற்றும் உந்துருளியில் சென்ற 15 க்கு மேற்பட்டவர்கள் வாள்களுடன் வீடு புகுந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அத்தோடு ஒரு உந்துருளி எரிக்கப்பட்டுள்ளதோடு, மற்றொரு உந்துருளி அடித்து சேதமாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு தற்காலிக வீடு எரிக்கப்பட்டுள்ளது. மூன்று வீடுகளின் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

வாள் வெட்டுக்குள்ளான குடும்பங்களில் ஒரு குடும்பம் கிளி நொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று தங்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் ஆனால் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe