Ads Area

சுற்றுலா பயணிகளை கவர அவர்களுக்கு 'ஒரு நாள் திருமணம்' செய்து வைக்கும் நாடு!






உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்று என புகழப்படும் நெதர்லாந்துக்கு சுற்றுலா செல்பவர்களைக் கவரும் வகையில் அதிரடி திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டைச் சேர்ந்தவர்களுடன் ஒரு நாள் திருமணம் செய்துவைக்கும் திட்டம்தான் அது.

ஒரு நாள் திருமணமா என நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆம், ஒருநாள் திருமணம் தான், எவ்வித சட்டப்பூர்வமான அம்சங்களும் உள்ளடக்கப்படாமல் சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் தான் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது.

அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிக்கும் உள்ளூர்வாசி ஒருவருக்கும் சுமார் 35 நிமிடங்களுக்கு திருமணச்சடங்கு நடத்தப்படும். பின்னர் ஒருநாள் திருமணம் செய்த நபரை "தேனிலவு" என்ற பெயரில் ஆம்ஸ்டர்டாமின் அறியப்படாத பல சுற்றுலாமையங்களுக்கு அழைத்துச் சென்று அந்த உள்ளூர்வாசி காண்பிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் அங்குள்ள உள்ளூர்வாசியுடன் டேட்டிங் செய்வதற்கான வசதியும் செய்துகொடுக்கப்படுகின்றது. இதன்படி டேட்டிங் செல்வதற்கான துணையை தெரிவுசெய்தபின் குறித்த ஜோடி அங்குள்ள பண்ணையில் களை பிடுங்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டோ அல்லது முதியவர் ஒருவர் பூங்காவில் நடைபயில உதவிசெய்துகொண்டோ அல்லது வேறு ஏதாவது தொண்டுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டோ ஒருவரையொருவர் அறிந்துகொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.


வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்துக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்நிலையில் இப்புதிய திட்டமானது இன்னும் பலரை கவர்ந்திழுக்கும் என நம்பப்படுகிறது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe