Ads Area

இனி வெளிநாட்டில் இருந்தே உயர்தர, சாதாரண தர பரீட்சைக்கு தோற்றலாம்!

வெளிநாட்டிலிருக்கும் இலங்கைப் பிள்ளைகள் கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர். இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.


குறித்த பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையத்தளம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார். நேற்று பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற வைபமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe