Ads Area

சவுதி அரேபியாவி்ல் பணியாளர்கள் அதிக சூரிய வெப்பத்தில் வேலை செய்யத் தடை விதிப்பு.

சவுதி அரேபியாவி்ல் பணியாளர்கள் அதிக சூரிய வெப்பத்தில் வேலை செய்யத் தடை விதிப்பு.

வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் தற்போது மிக அதிக வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது இவ் அதிக வெப்ப தாக்கத்தில் இருந்து வெயிலில் வேலை செய்யும் பணியாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பணியாளர்கள் அதிக சூரிய வெப்பத்தில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் அதாவது June 15ம் திகதியிலிருந்து September 15ம் திகதி வரை பகல் 12 மணி முதல் 3 மணி வரையான காலப் பகுதியில் வெளியில் வேலை செய்யவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய தொழிலாளர்கள் அமைச்சு (Ministry of Labor) சகல கொம்பனிகளுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளது.


இத் தடையானது சவுதி அரேபியாவில் உள்ள ஏனைய அதிக வெப்பமற்ற காலநிலையினைக் கொண்ட பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ள அதே வேளை அவசர-அவசிய (Oil and Gas) வேலைத்தளங்களில் வெயிலில் வேலை செய்யும் போது அதற்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வேலை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

இத் தடையை மீறி பணியாளர்களை அதிக வெயிலில் வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மற்றும் கொம்பனிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யும் வகையில் 19911 என்ற தொலைபேசி இலக்கத்தையும் தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ளது.

தகவல்.
மக்கள் நண்பன்  
சம்மாந்துறை அன்சார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe