Ads Area

சிங்கள பெண்களுக்கான சட்டவிரோத கருத்தடை சாத்தியமற்றது - மகப்பேற்று நிபுணர் ஹேமந்த சேனாநாயக்க.

குருநாகல் வைத்தியரின் சட்டவிரோத கருத்தடை மிகவும் சாத்தியமற்றது - பேராசிரியர் ஹேமன்த சேனாநாயக

இன்று இலங்கையில் அதிகம் பேசு பொருளாக இருப்பது  21/04 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பின் ஏற்பட்ட அசாதாரண நிலைமை ஆகும். அந்த வகையில் குருநாகல் வைத்தியசாலை முஸ்லீம் வைத்தியர் ஒருவர் ஆயிரக்கணக்கான தாய்மார்களுக்கு சட்டவிரோதமாக நிரந்தர கருத்தடை சிகிச்சையை செய்தார் என்ற சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதைப்பற்றி பேராசிரியரும் மகப்பேற்று நிபுணரும் ஆகிய Prof ஹேமந்த சேனாநாயக்க அவர்கள் ஆங்கில பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின் தமிழாக்கம் இது.

நான்l

இப் பேராசிரியர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மகப்பேறு பிரிவில் பகுதி தலைவரும், இலங்கை மகப்பேற்று வைத்திய நிபுணர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆகும்.

“இந்த கருத்தடை சம்பந்தமான குற்றச்சாட்டு மிகவும் சாத்தியமற்றது. ஏனென்றால் மற்ற வைத்தியர்களின் பிரசன்னத்தில் தவறுதலாக ஒரு சிசேரியன் சத்திரசிகிச்சை  செய்வதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. மேலும் பலோப்பியன் குழாயானது சாதாரணமாக சிசேரியன் சத்திர சிகிச்சையின் போது வெளியில் தெரிவதில்லை என்பதாலும் அதைச் சேதப் படுத்துவதற்கு கைகளை வயிற்றினுள் உட்செலுத்த வேண்டும் என்பதாலும் அவ்வாறு நடைபெறுவதற்கு சாத்தியமில்லை.

இந்த குற்றச்சாட்டானது முறையாகவும் விரைவாகவும் விசாரிக்கப் படாத இடத்தில் இது இலங்கையின் மகப்பேற்று வைத்திய துறையில் சர்வதேச மட்டத்தில் பாராட்டப்படக் கூடிய அளவில் ஏற்படுத்தப்பட்ட சாதனைகளுக்கு ஒரு எதிர்மறையான விளைவை கொடுக்கும்.

இன்று இலங்கையில் 99 வீதமான பிறப்புக்கள் வைத்தியசாலைகளில் நடைபெறுகின்றது. இந்நிலையில் இந்த செய்தியால் மக்கள் வைத்தியசாலையில் குழந்தை பெறுவதற்கு பயப்படக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும்.

மேலும் இன்று இலங்கையில் சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பெறும் அளவு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தற்பொழுது 39 விதமான பிரசவம் ஆனது சத்திர சிகிச்சை மூலமே நடைபெறுகிறது. அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் போன்ற வளர்ந்த நாடுகளில் இதைவிட குறைந்த அளவான விகிதாஇதாசாரத்திலேயே சிசேரியன் சிகிச்சை செய்யப்படுகிறது.

பலோப்பியன் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இரண்டு விதமான பரிசோதனைகள் மூலம் நாங்கள் அறிந்து கொள்ளலாம்

1. எக்ரே படம் எடுப்பதன் மூலம் 
2. லப்ராஸ்கோப்பி (Laparoscopy) பரிசோதனை மூலம்

இந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு மருத்துவ நிர்வாக பிரிவினரைவிட மகப்பேற்று வைத்திய துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களே தலைமை தாங்க வேண்டும். இது ஏற்கனவே தேசிய ரீதியாக பேசப்படுகின்ற ஒரு விடயம் என்பதால் உள்ளக விசாரணையைவிட தேசிய ரீதியான விசாரணையை சாலச்சிறந்ததாகும். இந்த விசாரணையை மேற்கொள்வதற்குரிய போதுமான மனிதவளம் எம்மிடம் உள்ளது.

மேலும் இந்த குற்றச்சாட்டு குறித்து விரைவான வெளிப்படைத் தன்மையான ஒரு விசாரணை நடைபெற்று உண்மைகள் கண்டறியப்பட்டு அதற்குரிய தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எனவே பொதுமக்கள் எப்போதும் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளிலேயே கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் உணர்ச்சிகளுக்கும் வதந்திகளுக்கும் ஏற்ப முடிவுகளை எடுக்கக் கூடாது.

- Prof ஹேமந்த சேனாநாயக்க -

மொழிபெயர்ப்பு
Dr விஷ்ணு சிவபாதம்

செய்திக்கு நன்றி - voiceofhmg
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe