அன்சார் காசீம்.
பெரும்பான்மைச் சமூகங்களின் மனங்களை வென்றெடுக்கக்கூடிய விதத்தில் நடந்து கொள்ள தேவை மிக அவசியமாகும். என மன்சூர் எம்.பி தெரிவிப்பு.
இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்கொண்ட வண்ணமேயுள்ள நிலையில் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை தேசிய கலை இலக்கிய தேனகத்தின் ஏற்பாட்டில் கவிஞினி சித்தி றபீக்க பாயிஸ் எழுதிய “வற்றாத ஈரம்” எனும் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா இன்று (16) சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபவத்தில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் இனங்களுக்கிடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து அவதானிக்க கூடியதாகவுள்ளது. அவ்வாறானதொரு சூழ்நிலையில் முஸ்லிம் மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் மிக நிதானமாகவும், பொருமையுடனும், நாட்டின் பாதுகாப்பையும், ஸ்திரத்தன்மையும் உறுத்திப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்.
பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக வாழும் நாடொன்றில் சிறுபான்மை சமூகத்தின் மிகப்பெரும் பலம் அரசியல் பலமாகும். இதற்கேற்ப முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறந்தமை முஸ்லிம் சமூகத்தின் மீது ஏனைய சமூகங்களின் பார்வைத் திரும்பியுள்ளதுடன், பௌத்த உயர்பீடத்தின் கோரிக்கை பௌத்த இனவாதிகளுக்கு பலத்த அடியாகும்.
எனவே, இவ்வாறான சூழலில் முஸ்லிம் காங்கிரசும், அதன் தலைமையும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு வருவதுடன், நாட்டின் தேசிய மற்றும் இருப்பு, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு என்பனவற்றை முன்னிறுத்தி எதிர்கால தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிகழ்வில் கல்விமான்கள், கவிஞர்கள், அரசியல் பிரமுகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.