Ads Area

சம்மாந்துறை கைகாட்டி “எஸ்” வாய்க்காலுக்கு மேலாக பாலம் நிர்மாணிக்க நடவடிக்கை.

அன்சார் காசீம்.

உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கிராமப்புற பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் செலவில் சம்மாந்துறை கைகாட்டி புளக் “ஜே” மேற்கு-2 பிரிவிலுள்ள “எஸ்” வாய்க்காலுக்கு மேலாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் அயராத முயற்சியின் பலனாக இப்பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த இப்பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் எம்.எஸ்.நவாஸ் தலைமையில் (14) இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்பாலத்திற்கான அடிக்கல்லினை நட்டி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.நளீம், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்பாலமானது 16 மீற்றர் நீளமும், 5.5மீற்றர் அகலமும் கொண்டதாகும். புளக் “ஜே” மேற்கு-2 கிராமத்திலிருந்து புளக் “ஜே” மேற்கு-1 நெல்நெல் கிராமம் மற்றும் விளினையடி கிராமங்களுக்கு மிக இலகுவாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளும் இப்பாலத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளலாம்.

மழைக்காலங்களில் இப்பிரதேச மக்கள் போக்குவரத்தினை செய்ய முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனை கருத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பலனாக இப்பாலம் நிர்மாணிக்கப்டுகின்றது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe