Ads Area

சவுதி றியாத் நகரில் உள்ள இலங்கை துாதரகத்தின் மூன்றாவது செயலாளராக பாசில் பாறுக் நியமனம்.

சவுதி றியாத் நகரில் உள்ள இலங்கை துாதரகத்தின் மூன்றாவது செயலாளராக பாசில் பாறுக் நியமனம். 

மல்வானையை சேர்ந்த பாசில் பாருக், சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் உயர் பதவியான Third Secretary (மூன்றாவது செயலாளர்) பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பணவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற இலங்கை வெளிநாட்டு சேவைகள் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து வெளிநாட்டு அமைச்சில் உதவிப் பணிப்பாளராக இவர் பணியாற்றிய நிலையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மல்வானை பிரதேசத்திற்கு பல பெருமைகளைத் தேடிக்கொடுத்த இவர், அண்மையில் முதுமாணி பட்டம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மல்வானை, உளஹிட்டிவலையைச் சேர்ந்த மொஹமட் பாருக், சித்தி மதீனா ஆகியோரின் புதல்வனான இவர், மல்வானை அல் முபாரக் தேசிய பாடசாலை மற்றும் பேருவளை ஜாமியா நளீமியா கலாசாலை ஆகியவற்றின் பழைய மாணவருமாவார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe