(றியாத் ஏ.மஜீத்)
கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பொறியியலாளராக பொறியியலாளர் ஏ.ஜே.ஜௌசி உடன் செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேய குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பொறியியலாளருக்கான கடமைகளையும் ஆவணங்களையும் பொறியியலாளர் ஜௌசியிடம் ஒப்படைக்குமாறு பொறியியலாளர் ஜி.அருணுக்கு 15.07.2019ம் திகதியிடப்பட்ட கடித்தத்தின் மூலம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேய குணவர்தன பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.