சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சஹீலினால் கம்பலிய திட்டத்தின் கீழ் அம்பாறை 14, 12 மற்றும் 16ம் வீதிகள் அபிவிருத்தி.
சம்மாந்துறை உடங்கா -01 மற்றும் உடங்கா - 02 கிராம சேவகர் பிரிவில் உள்ள பல வீதிகள் சீரற்று காணப்படுகின்றமையினால் அவற்றினை திருத்தம் செய்து தருமாறு வட்டார பிரதேச சபை உறுப்பினர் சஹீல் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க கம்பலிய வேலைத் திட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்ரஸின் சம்மாந்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இஸ்மாயில் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் உடங்கா -01 கிராம சேவகர் பிரிவில் திருத்தம் செய்யப்படாதிருந்த அம்பாறை 14, 12 மற்றும் 16ம் வீதிகளின் திருத்தப்ப பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அம்பாறை 14, 12 மற்றும் 16ம் வீதிகளின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மக்கள் வட்டார உறுப்பினர் ஏ.சீ.எம். சஹீல் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இஸ்மாயில் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் திரு. நௌஷாத் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததனை அடுத்து குறித்த வீதிகள் துரித கதியில் செய்து முடித்து பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.