நிந்தவூரில் SLAS தயார்படுத்தல் வகுப்புகள் – Open/Limited (சேவை நோக்கில்)
எமது பிராந்தியத்தில் நீண்ட காலமாக நிலவிவரும் பற்றாக்குறைகளில் அரச சேவைப் பரீட்சைகளுக்குத் தகுதியானவர்களை பயிற்றுவிக்க முழுமையான ஒரு அமைப்போ, வழிகாட்டல் செயலமர்வுகளோ இல்லாமை முக்கியமான பிரச்சினையாகும். இதற்கெல்லாம் பயிற்சி வகுப்புகள் தேவையா ? என்ற காலகட்டத்திலிருந்து தேவைதான் என்கிற ஒரு காலகட்டத்துக்குள் நுழைந்திருக்கிறோம். ஆனால், சில அமைப்புகள் பெருந்தொகைப்பணத்தை அறவிடுவதில் கவனம் செலுத்தி வருவதால் பலரும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் பலரும் சரியான முறையில் தயாராக முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகின்றனர்.
இந்த சிக்கலான சூழ்நிலையை ஓரளவு தீர்த்து வைக்க எமது Vacancy Sri Lanka அமைப்பானது நிந்தவூரில் சேவை நோக்கில் SLAS தயார்படுத்தல் வகுப்புகளை எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பிக்கிறது. வளவாளர் கட்டணங்கள் மட்டுமே விண்ணப்பதாரிகளிடமிருந்து பெறப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். தவிர, சில வகுப்புகளை இலவசமாக நடாத்தவும் தீர்மானித்துள்ளோம்.
நிறைய பட்டதாரிகள் தொழில்வாய்ப்புகளுக்காக வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழலில், இத்தகைய பேட்டிப்பரீட்சைகள் அவர்களுக்கு வரப்பிரசாதமே. சிறந்த முறையில் தயார்படுத்தல்களை மேற்கொள்ளும் ஒருவரால் மிக இலகுவாக சித்தியடையக்கூடிய இதுபோன்ற பரீட்சைகளில் பலரும் பொடுபோக்காக இருப்பதனால் சித்தியடைய முடியாமல் தொழில் வாய்ப்புகளுக்காக வீதிகளில் மறியல் போராட்டங்களில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. தொழிலுக்காகக் காத்திருக்கும் காலத்தை பரீட்சை தயார்படுத்தல் காலமாக மாற்றிக்கொண்ட பலரே இன்று அரச நிர்வாக சேலை அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர். மிக இளம் வயதில் அரச உயர் அதிகாரிகளாக பரிணமிக்க இது ஒரு அரிய சந்தர்ப்பம் என்பதை பட்டதாரி இளைஞர் யுவதிகள் புரிந்துகொள்ளுங்கள்.
எதிர்வரும் ஆகஸட் 3ம் திகதி நிந்தவூர் MPCS Hall (Next to KM/AL-Ashraq National School) ஆரம்பமாகவுள்ள வகுப்பு விபரங்கள்.
Date :- 03.08.2019, Time : 9 AM to 1PM
Subject :- இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் பின்னணியும் போக்குகளும் & உலகளாவிய போக்குகள்.
Resource Person :- S.Partheepan (SLAS), Assistant Secretary , Ministry of Agriculture (E.P)
Date :- 04.08.2019, 9AM to 2PM
Subject:- விடய ஆய்வு - ii (SLAS Limited) & ஆக்கபூர்வமான, பகுப்பாய்வு ரீதியான மற்றும் தொடர்பாடல் திறன்கள்
Resource Person :- MBM. Sufyan (SLAS), Assistant Commissioner of Elections, Anuradhapura District.
இவைதவிர மற்றைய பாடங்களும் அடுத்தடுத்த வாரங்களில், இலங்கையின் முன்னணி வளவாளர்களினால் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மிகுந்த கடின முயற்சிகளினால் இந்த வகுப்புகளை உங்கள் காலடிகளில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறோம். எனவே இந்த சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி, முழுப்பயனையும் பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.
முன்பதிவுகளுக்கும், மேலதிக விபரங்களுக்கும் 0772301539, 0752763983 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொள்ளுங்கள்.