காத்தான்குடி முஸ்லிம் ஆக்கள் என்றால் பயங்கரமானவர்கள் என்று இதுவரை காலமும் எண்ணியிருந்தேன்....!!!!
புதன்கிழமை காலை 6.50 க்கு சென்னையிலிருந்து கட்டுநாயக விமான நிலையம் வந்தடைந்தேன் இது விமான நேரசூசியின் நேரத்தை விட 10 நிமிடம் முன்பாகயிருந்தது...
உள்ளே இருந்த பெரும்பான்மை சாரதி எங்கே செல்லவேண்டும் என்று கேட்க நானும் தனியார் வாகனத்தரிப்பிடம் செல்லவேண்டும் என்று கூற அவரும் திரும்ப எந்த ஊர் என்று கேட்க நானும் காத்தான்குடி என்று கூறினேன்... (எக்கால கட்டத்திலும் நான் என் ஊரின் பெயரைக் கூறத் தயங்குவதில்லை) முற்சக்கர வாகனப் பயணம் முடிவுற்றது எனது பயணப் பொதிகள் அனைத்தையும் பஸ் உள்ளே ஏற்றியும் தந்தார் அந்த சாரதி...
அவரிடம் முற்சக்கர வண்டியில் வந்ததற்கான கூலியை நானும் கேட்க அவரோ எவ்வளவு என்றாலும் பறவாயில்லை தாருங்கள் குறைந்தது 100 ரூபாய் சரி தாருங்கள் என்று அவர் கூற எனது மனச்சாட்சி உறுத்தியது அவர் கேட்ட கூலி போதாது என்பதை...
150 ரூபாயைக் கொடுத்தேன் அவரோ அதை வாங்கிவிட்டு என் கையைப் பிடித்து அழுதுவிட்டார்... எனது கண்ணும் அவர் கண்ணைப் பார்த்ததும் லேசாகப் பனித்துவிட்டது... ஏன் அழுகிறீர்கள் என்று நானும் வினவ அவரோ மஹத்தயா காலையில் பக்கட்டில் இருந்த காசு பூராகவும் எனது முற்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்பிவிட்டேன் காலையில் சாப்பிடக் கூட காசில்லாமல் பசியுடன் வந்தேன் நீங்கள் வந்து இப்படி தந்தது எனக்கு அதிசயமாகயிருந்தது என்றார்...
அதற்கு அவர் மன்னித்துவிடுங்கள் நானோ காத்தான்குடி முஸ்லிம் ஆக்கள் என்றால் பயங்கரமானவர்கள் என்று இதுவரை காலமும் எண்ணியிருந்தேன் என்று கூறி என் முகத்தைத் தடவி கரம் கூப்பி விடை பெற எத்தனிக்க நானோ அவரது கரத்தை பிடித்துக் கூறினேன் மனிதன் மற்றொரு மனிதருக்கு கரம் கூப்பக் கூடாது உங்கள் கரம் கடவுளிடம் மாத்திரமே கரம் கூப்பவேண்டும் எனக் கூற அவரோ அதை ஏற்றுக் கொண்டவராக விடைபெற்றார்...
(Junaid Mohamed Mujeeb)