நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஊழியர்கள்.
நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊழியர்கள் உட்பட உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (2019.07.30) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
1. 2020 ஜனவரியில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அடிப்படை சம்பளத்தை 2015 டிசம்பர் அடிப்படைச் சம்பளத்தின் 107% ஆல் அதிகரிக்க தேவையான சுற்றுநிருபத்தை வெளியிடல்.
2. 45% மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பவை 75% வரை உயர்த்துவதற்கு அவசியமான சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.
3. பல்கலைக்கழக முறைமைக்கு செலுத்தப்படுகின்ற ஓய்வூதியத்தை பயனுள்ளதாக தயாரித்துக் கொள்ளல்.
4. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித் தேர்ச்சி கொடுப்பனவை செலுத்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.
5. அனைத்து பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் பொதுக் காப்புறுதி முறையொன்றை நடைமுறைப்படுத்தல்.
6. கொடுப்பனவுகள் மற்றும் சகல கடன் எல்லைகளையும் அதிகரித்தல்.
7. கல்விசாரா ஊழியர்களை நேரடியாக பாதித்துள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு நடைமுறையை சரியானதாக தயாரித்துக் கொள்ளல் மற்றும் ஊழியர் எண்ணிக்கை அறிக்கையை சரியானதாக தயாரித்துக் கொள்ளல்.
8. உதவிச் செயலாளர் / உதவிப் பதிவாளர்/உதவி கணக்காளர் / உதவி நிதியாளர் மற்றும் உதவி உள்ளக கணக்காய்வாளரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறையை திருத்தியமைத்து வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை இரத்துச் செய்து முன்னர் காணப்பட்ட வழிமுறைக்கேற்ப மேற்குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவென சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.
9. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் 876ம் இலக்க சுற்றுநிருபத்தை இல்லாதொழித்து நாடு பூராகவும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு போட்டிப் பரீட்சை நடாத்தி பல்கலைக்கழக முறைமையின் மேம்படுத்தலுக்காக ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்ய நடவடிக்கை எடுத்தல்.
10. கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சேர்க்கும்போது முன்னுரிமையை பெற்றுக்கொள்ளல்.
11. கல்விசாரா ஊழியர்கள் என்ற பதத்தினை மாற்றுதல்.
மேற்படி கோரிக்கைகள் குறித்து பல தொழிற்சங்கங்கள் இணைந்த பல்கலைக்கழக தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், உயர்கல்வி அமைச்சர் உட்பட அரசின் உயர் மட்டங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளது.
எம்.ஐ.சர்ஜுன்