இயற்கை சில நேரங்களில் நம்ப முடியாத வினோதங்களை நிகழ்த்திவிடுகிறது. அப்படி ஒரு நிகழ்வாக போலந்து நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்கவில்லை என்ற வினோதத்தில் உள்ளது.
மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது மிஜெஸ் ஒட்ரஜான்ஸ்கி கிராமம். சுமார் 300 பேர் வரை வசிக்கும் இக்கிராமத்தில், கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைகள் பிறக்காததால் எதிர்காலத்தில் ஆண்களின் சதவீதம் குறைந்துவிடும் எனவும், இந்த விவகாரத்திற்கு எப்படி தீர்வு காண்பது என்று தெரியாமல் குழம்பி போயுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

